சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்
வட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரியில் கு.பழனிவேல் - உண்ணாமலை அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.
சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பும் மேற்கொண்டார்.
தன்னுடைய 18வது வயதில் இந்தோனேசியாவில் உள்ள மைடனுக்கு கடல் பணியாளராகச் சென்றார். பின்னர் 1940இல் இந்தோனேசியா அரசின் மராமத்து துறையில் பணியாற்றினார்.
ப. சிங்காரம் இந்தோனேசியாவில் இருந்தபோது ஹெமிங்வேயின் பல நாவல்களை வாசித்திருக்கிறார். ஹெமிங்வேயின் "A Farewell to arms" இவருக்கு மிகவும் பிடித்த நாவல்.
ப. சிங்காரத்தின் நண்பர்கள் பலர் I.N.A.வில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் யுத்தம் பற்றி பல விவரங்களை அறிந்திருக்கிறார். பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகவும் போயிருக்கிறார். இதெல்லாம் இவருக்கு நாவல் எழுத பெரிதும் உதவியிருக்கிறது.
![புயலிலே ஒரு தோணி [Puyalilae Oru Thoni]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1663566723l/5637466.jpg)

